அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சுமார் ரூ‌ 1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ துவக்கி வைத்தார் மேலும் மகளி

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சுமார் ரூ‌ 1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ துவக்கி வைத்தார் மேலும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவியும் வழங்கினார்;

Update: 2025-05-27 14:22 GMT
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சுமார் ரூ‌ 1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ துவக்கி வைத்தார் மேலும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவியும் வழங்கினார் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சுமார் ரூ‌ 1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ துவக்கி வைத்தார். அதன்படி வில்லிபத்திரி கிராமத்தில் ரூ 30 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கும், ரூ 31.40 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடம் கட்டுவதற்கும், பாளையம்பட்டி தீர்த்தக்கரை பகுதியில் ரூ 42.45 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளுக்கும், பாளையம்பட்டி பசும்பொன் நகர் விரிவாக்க பகுதியில் ரூ 13.30 லட்சம் மதிப்பில் புதிய நியாய விலை கடை கட்டிடம் கட்டுவதற்கும் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். அதே போல் கோவிலாங்குளம் கிராமத்தில் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கலையரங்க கட்டிடத்தையும், ரூ 9.97 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நியாய விலை கடை கட்டிடத்தையும், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ரூ 9.50 லட்சம் மதிப்பில் இ‌- சேவை மைய கட்டிடத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார். மேலும் பாளையம்பட்டி தீர்த்தக்கரை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மரையும் அமைச்சர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் பாளையம்பட்டி விரிவாக்கப் பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கிளையை திறந்து வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ மூன்று சுய உதவி குழுக்களுக்கு ரூ 23 லட்சம் மதிப்பில் கடன் உதவிகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.‌

Similar News