போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

மயிலாடுதுறையில்போக்ஸோ வழக்கில் இளைஞர் ஒருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பளித்தார்.;

Update: 2025-01-30 16:44 GMT
மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அகரகீரங்குடியை சேர்ந்தவர் விக்னேஷ்(24) (படம்). இவர் 2017-ஆம் ஆண்டு சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, வழக்கின் விசாரணை மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ராம.சேயோன் ஆஜரானார். இன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விக்னேஷ்-க்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2,000 அபராதம் விதித்து மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பளித்தார். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 3 மாதங்கள் தண்டனை வழங்கி அவர் உத்தரவிட்டார்.

Similar News