அரசு பொதுத்தேர்வு எழுதும் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அறிவுரை
17 மாணவர்களுக்கு இங்க் பேனா-1, ஒரு அடி ஸ்கேல்-1, காகித பென்சில்-1, சார்ப்பனர்-1, அழி ரப்பர்-1, காம்பஸ் கருவி-1, இங்க் பாட்டில்-2 ஆகிய தேர்வுக்குரிய உபகரண பொருட்கள் வழங்கி உதவினார்.;
பெரம்பலூர் வட்டம் , செங்குணம் அ.உ.நி.பள்ளியில் இன்று தலைமை ஆசிரியர் மதியழகன் முன்னிலையில் செங்குணம் பெஸ்ட் சவுண்ட் சர்வீஸ் பெ.சித்தம்பலம் தமது சொந்த செலவில் 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பொதுத்தேர்வு எழுதும் 10 ஆம் வகுப்பு பயிலும் 17 மாணவர்களுக்கு இங்க் பேனா-1, ஒரு அடி ஸ்கேல்-1, காகித பென்சில்-1, சார்ப்பனர்-1, அழி ரப்பர்-1, காம்பஸ் கருவி-1, இங்க் பாட்டில்-2 ஆகிய தேர்வுக்குரிய உபகரண பொருட்கள் வழங்கி உதவினார் . நிகழ்ச்சியில் செங்குணம் குமார் அய்யாவு உட்பட்ட ஆசிரியர்கள் பலர் உடனிருந்தனர்