பைக் விபத்தில் 10-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

அருமனை;

Update: 2025-03-04 06:00 GMT
குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள களியல் பகுதியை சேர்ந்தவர் பைஜூ. ஆட்டோ டிரைவர். இவரது மகன் சுபின் (15). அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். சம்பவ தினம்  சுபின் தனது வீட்டில் இருந்த பைக்கை ஓட்டி பார்த்து,  பயிற்சியில் இருந்துள்ளார்.       அப்போது பைக் கட்டுப்பாடு இழந்து சுவற்றில் மோதி, சுபின் தூக்கி வீசப்பட்டார். இதில்  வீட்டின் வாசல் கேட் அவரது தலையில் இடித்து படுகாயம் அடைந்தார். சத்தம் கேட்டு வெளியே வந்த சுபினின் தாயார் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நெய்யாற்றின்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்தனர்.        பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.  இது குறித்து அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News