பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு

பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்க ளுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது. இந்த பரிசு பெற மே மாதம் 1-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் பிர தீப்குமார் தெரிவித்துள்ளார்.;

Update: 2025-03-05 03:51 GMT
மீண்டும் மஞ்சப்பை" பிரசாரத்தை முன்னேடுத்துச் செல்லும் வகை யில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சர் 2024-25 நிதியாண்டிற் கான மஞ்சப்பை விருதுகளை சட்டமன்றக் கூட்டத்தில் அறிவித்தார். ஒற்றைப் பயன்பாடு பிளாஸ்டிக்குகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாக மஞ்சப்பை போன்ற பாரம்பரிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை மீண் டும் உயிர்ப்பித்து தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற் றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்க ளுக்கு இது வழங்கப்படும். முதல் பரிசாக ரூ.10 லட்சம், 2-வது பரிசாக ரூ.5 லட்சம் மற்றும் 3-வது பரிசாக ரூ.3 லட்சம் வழங்கப்படும். இந்த அறிவிப்பின்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பட்டு வாரியம், ஒற்றைப் பயன்பாட்டு, பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாகப் சுற்றுச் சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும், தங்கள் வளாகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆக்கப்பூர்வமான முயற்சி கள் மூலம் தடையை அமல்படுத்துவதற்கும் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றுவதற்கும் முன்மாதிரியான பங்களிப்பைச் செய்த பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருது களை வழங்க உள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக இணையதளத்திலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணை யதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களின் அனைத்து இணைப்புகளிலும் தனிநபர் அல்லது அமைப்புத் தலைவர் முறையாக கையொப்பமிட வேண்டும். விண்ணப்பங்களின் நகலுடன் 2 பிரதிகள் மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்படவேண்டும். மேலும், தமிழ் நாடு மஞ்சப்பை விருது பெற விண்ணப்பிக்க கடைசி நாள் வரு கிற மே மாதம் 1-ந்தேதி ஆகும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். Article3/15

Similar News