நாகர்கோவில் மாநகரப் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே பிளாஸ்டிக் புழக்கங்கள் அதிக அளவில் இருந்து வருகின்றன. இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் உத்தரவிட்டனர். இதை அடுத்து மாநகர அலுவலர் டாக்டர் மதியரசு தலைமையில் சுகாதார அலுவலர்கள், மாநகர பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் நகரப் பகுதிகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். வடசேரி சந்தை, மீனாட்சிபுரம் பகுதிகளில் உள்ள காய்கறி கடைகள், ஓட்டல்களில், பெட்டி கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒரே நாளில் 126 கடைகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்து தெரிய வந்தது. இதையடுத்து 10 கடைகளுக்கு ரூபாய் 22,500 அபராதம், அங்கிருந்த ஒன்பது கிலோ பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிளாஸ்டிக் பைகளில் போலி கியூ ஆர் கோடு முத்திரை இருந்த இது தெரிய வந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.