குமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் உள்ள மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கிய தீன் (35) மீன்பிடி தொழிலாளி. இவரது வீட்டு அருகில் ஒரு குடும்பம் வசித்து வந்தது. அந்த குடும்பத்தில் 14 வயது சிறுமி ஒருவர் இருந்தார். கடந்த 2019 ஆண்டு நவம்பர் மாதம் சிறுமி தின் வீட்டில் தனியாக இருந்த போது அங்கு சென்ற ஆரோக்கிய தீன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை வெளியே சொல்லாமல் இருக்க கொலை மிரட்டல் விடுத்துள்ளார் . பின்னர் இது குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர் இது குறித்து குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்சோவில் வழக்கு பதிவு செய்து ஆரோக்கிய தீனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரித்த நீதிபதி சுந்தரய்யா நேற்று தீர்ப்பு கூறினார். தீர்ப்பில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஆரோக்கிய தீனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 6 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.