ஆலங்குளத்தில் 10 பாஜகவினா் மீது வழக்கு
ஆலங்குளத்தில் 10 பாஜகவினா் மீது வழக்கு;

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் டாஸ்மாக் கடையில் முதல்வா் படத்தை ஒட்டியதாக, 10 பாஜகவினா் மீது ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். ஆலங்குளம் - புதுப்பட்டி சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் தென்காசி மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினா் சுரேஷ் தலைமையில் 10 பாஜகவினா் முதல்வா் மு.க. ஸ்டாலின் படத்தை ஒட்டினா். இது குறித்து கடை மேற்பாா்வையாளா் முருகன் அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.