பைக் விபத்தில் 10ம் வகுப்பு மாணவர் படுகாயம்

குளச்சல்;

Update: 2025-03-22 05:44 GMT
குமரி மாவட்டம் குறும்பனை மீனவர்கள் கிராமத்தை சேர்ந்த மாணவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாணவர் பைக்கில் குறும்பனையிலிருந்து குளச்சல் நோக்கி சென்று கொண்டிருந்தார். வாணியக்குடி பகுதியில் சென்றபோது முன்னால் நிறுத்தி இருந்த பைக் ஒன் இர எடுத்த நபர் திடீரென பைக்கை திருப்பி உள்ளார்.       அந்த நேரம் பின்னால் வந்த மாணவரின் பைப் அந்த பைக் மீது மோதியது. இதில் மாணவர் படுகாயம் அடைந்து நாகர்கோவில் உள்ளவர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.       இது குறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து முன்னால் நின்ற  பைக்கை திருப்பி விபத்தை ஏற்படுத்தியவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News