அருப்புக்கோட்டை அருகே 10-ம் வகுப்பு தேர்வில் தந்தை, மகன் தேர்ச்சி- மகிழ்ச்சியில் குடும்பத்தினர்*

அருப்புக்கோட்டை அருகே 10-ம் வகுப்பு தேர்வில் தந்தை, மகன் தேர்ச்சி- மகிழ்ச்சியில் குடும்பத்தினர்*;

Update: 2025-05-17 08:56 GMT
அருப்புக்கோட்டை அருகே 10-ம் வகுப்பு தேர்வில் தந்தை, மகன் தேர்ச்சி- மகிழ்ச்சியில் குடும்பத்தினர் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள மண்டபசாலை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (45) இவர் சிலுக்குப்பட்டியில் கிராம உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் கவின்குமார் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதி இருந்தார். நேற்று தேர்வு முடிவு வெளியான நிலையில் 358 மதிப்பெண்கள் எடுத்து கவின்குமார் தேர்ச்சி பெற்றிருந்தார். இந்த நிலையில் கவின்குமார் தந்தை செந்தில்குமார் தனித்தேர்வராக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தார். இவரும் 210 மதிப்பெண்கள் எடுத்து பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஒரே நேரத்தில் தேர்வு எழுதி தந்தை மகன் தேர்ச்சி பெற்றது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Similar News