பேராவூரணி அருகே ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கோயில் விழா மேடை திறப்பு
மேடை திறப்பு;
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மணக்காடு ஊராட்சி, வீரக்குடி ஆதிதிராவிடர் தெரு கோயில் விழா மேடை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட விழா மேடையை, சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து சீரமைப்பு பணி நடைபெற்று வரும் தர்ம ஊரணியைப் பார்வையிட்டார். மேலும், அதே ஊராட்சியில் பழுதடைந்து பயன்பாடற்ற நிலையில் உள்ள சமுதாயக் கூடத்தையும் பார்வையிட்டார். தர்ம ஊரணிக்கு சுற்றுச்சுவரும், புதிய சமுதாயக் கூடம் கட்டித்தரவும் கிராம மக்கள் அப்போது கோரிக்கை விடுத்தனர். நிகழ்வுகளில், சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சோ.நாகேந்திரன், பொறியாளர் ஆர்.ஜி.சுரேஷ், சேதுபாவாசத்திரம் தெற்கு திமுக ஒன்றியச் செயலாளர் வை.ரவிச்சந்திரன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் அருணாசலம் மண்கொண்டார், விஜயகுமார், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அழகு மீனா தங்கப்பன், செல்வராஜ் மற்றும் ஆத்மநாதன், முத்துவேல், வீ.கருப்பையா, முருகேசன், ராமமூர்த்தி, டாக்டர் நாகராஜன், ஞானபண்டிதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்