ஜெயங்கொண்டம் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது.

ஜெயங்கொண்டம் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது செய்தனர்.;

Update: 2025-06-19 17:07 GMT
அரியலூர், ஜூன் -20- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து மீன்சுருட்டி அருகே காட்டகரம் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் (60) ஆட்டோ டிரைவரான இவர்,மீன்சுருட்டி பகுதியில் ஆட்டோ வைத்து சவாரி எடுப்பதுடன் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி சவாரியும் செல்லும் இவர் தனது ஆட்டோவில் பள்ளி முடிந்து பயணம் செய்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பயந்து போன சிறுமி செய்வது அறியாமல் நடந்ததை தனது தாயாரிடம் அழுதுகொண்டு தெரிவித்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்த ஆட்டோ டிரைவர் அன்பழகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Similar News