வேப்பனப்பள்ளி அருகே10 அடி நீளம் மலைப்பாம்பு பிடிபட்டது.
வேப்பனப்பள்ளி அருகே10 அடி நீளம் மலைப்பாம்பு பிடிபட்டது.;
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள திம்மசந்திரம் கிராமத்தில் சாலையில் 10 அடி நீள மலைப்பாம்பு ஊர்ந்து வந்ததை அந்தப் பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வந்த வனத்துறையினர் 10 அடி நீள மலைப்பாம்பை லாவாகமாக பிடித்து கொங்கனப்பள்ளி காப்புக்காட்டில் விடுவித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.