சங்கரன்கோவில் அருகே தனி பட்டா வழங்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம்: விஏஓ கைது
தனி பட்டா வழங்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம்: விஏஓ கைது;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியூர் கிராமத்தில் தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் புஞ்சை நிலத்தில் கூட்டு பட்டா பெயர் மாற்றுவதற்கு கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமாரை அணுகிய போது அவர் 15,000 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பணம் வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது. அதில் விரக்தி அடைந்த தங்கராஜ் பணத்தை கொடுக்காத நிலையில் தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூபாய் 10,000 ரூபாய் பணத்தை தங்கராஜ் மூலமாக விஏஓ ராஜ்குமாரிடம் லஞ்சமாக கொடுத்த போது மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பால்சுதர் மற்றும் போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்..