ஜாக்டோ ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம்.
ஜாக்டோ ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம்.;
கரூரில் ஜாக்டோ ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம். தமிழக அரசு அறிவித்த தேர்தல் கால வாக்குறுதிபடி சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டிய பல்வேறு வாழ்வாதாரமான 10 அம்ச கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தற்செயல் ஒருநாள் விடுப்பு எடுத்து அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அன்பழகன், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் பெரியசாமி,அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயராம் ஆகியோர் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் வேலுமணி,தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் ஆரோக்கிய பிரேம்குமார்,தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் மாவட்ட செயலாளர் செல்வதுரை உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடந்த 2003-ம் ஆண்டுக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தினை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும். தொடக்க கல்வி துறையில் பணிபுரியும் 90% மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள அரசாணை 243 உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கும் மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி விடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அரசு பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 10- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.