கரூர்-லோக்அதாலத்-ரூ சுமார் 10- கோடி மதிப்பில் 2,566- வழக்குகளுக்கு தீர்வு.
கரூர்-லோக்அதாலத்-ரூ சுமார் 10- கோடி மதிப்பில் 2,566- வழக்குகளுக்கு தீர்வு.;
கரூர்-லோக்அதாலத்-ரூ சுமார் 10- கோடி மதிப்பில் 2,566- வழக்குகளுக்கு தீர்வு. தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படி கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவால் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. இதில் கரூரில் ஐந்து அமர்வுகளும், குளித்தலையில் இரண்டு அமர்வுகளும், அரவக்குறிச்சியில் ஒரு அமர்வு மற்றும் கிருஷ்ணராயபுரத்தில் ஒரு அமர்வு என மொத்தம் 9 அமர்வுகளில் நடைபெற்றது. இந்நிகழ்வினை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும்,மாவட்ட நீதிபதியுமான இளவழகன், அவர்கள் துவக்கி வைத்தார். இதில் அனைத்து நீதிபதிகள்,கரூர் பார் அசோசியஷன் தலைவர் மற்றும் செயலாளர், அட்வகேட் அசோசியேசன் நிர்வாகிகள்,வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், சட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இந்த அமர்வுகளில் 2890 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு ரூ9,91,92,068/-மதிப்பிலான 2566 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் அனுராதா செய்திருந்தார்.