செங்காட்டூர் கிராமத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊழல்

செங்காட்டூர் கிராமத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊழல்

Update: 2024-08-22 16:19 GMT
செங்காட்டூர் கிராமத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊழல்.. அரசு அதிகாரிகளே துணை போகின்றனர் உரிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதிக்குட்பட்ட செங்காட்டூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவியாக ஆர்த்தி என்பவர் செயல்பட்டு வருகிறார். மேலும் அவரது கணவர் செல்வகுமார் என்பவர் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் ஏழை எளியோரிடமிருந்து மாதம் தோறும் 200 ரூபாய் கொடுத்தால் மட்டுமே வேலை வழங்கி வருகிறார், இதனால் சுமார் 15 லட்சத்திற்கு மேலாக ஊழல் செய்து வருகிறார். இவர் மீது செங்காட்டூர் கிராம மக்கள் சம்பந்தப்பட்ட லாத்தூர் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் ஏழை எளிய மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்கள் அனைத்திலும் ஊழல், லஞ்சம் என பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் ஊராட்சி மன்ற தலைவி ஆர்த்தி மற்றும் அவரது கணவர் செல்வகுமார் என்பவர்கள் மீதி துரை ரீதியான அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நடவடிக்கை எடுக்க பட்சத்தில் பொதுமக்கள் ஒன்றிணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.

Similar News