கோவை: 100 நாள் வேலைத் திட்டம் நிறுத்தம் - பெண்கள் முறையீடு !
கோவை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த 100 நாள் வேலை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாகப் கிராமப் பெண்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.;
கோவை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த 100 நாள் வேலை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாகப் கிராமப் பெண்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், ஏற்கனவே பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு முழுமையான சம்பளம் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள அவர்கள், நேற்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், நிறுத்தப்பட்ட 100 நாள் வேலையை மீண்டும் வழங்கவும், வாரந்தோறும் சம்பளம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மனு அளித்த பெண்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசு நிதி ஒதுக்காத காரணத்தால் தமிழகத்தில் இத்திட்டம் ஸ்தம்பித்துள்ளதாகவும், இது தொழிலாளர்களுக்கு மத்திய அரசு செய்யும் வஞ்சனை என்றும் தெரிவித்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.