வெல்லம் வரத்து அதிகரிப்பு மூட்டைக்கு ரூ.100 குறைந்து விற்பனை
ஈரோடு மாவட்டம் வெள்ளம் வண்டியில் வரத்து அதிகரிப்பு மூட்டைக்கு ரூபாய் 100 குறைவு;
ஈரோடு அடுத்த சித்தோடு வெல்ல மார்க்கெட்டில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று ஏலம் மூலம் வெல்ல மூட்டைகள்(30 கிலோ) விற்பனை செய்யப்படும். இதன்படி, இந்த வாரம் கூடிய மார்க்கெட்டில் நாட்டு சர்க்கரை 2,700 மூட்டையும், உருண்டை வெல்லம் 3,100 மூட்டையும், அச்சு வெல்லம் 200 மூட்டையும் வரத்தானது. இதில், நாட்டுச்சர்க்கரை மூட்டை ஒன்று ரூ.1,300 முதல் ரூ.1,420 வரையும், உருண்டை வெல்லம் ரூ.1,380 முதல் ரூ.1,470 வரையும், அச்சு வெல்லம் ரூ.1,390 முதல் ரூ.1,450 வரை என்ற விலையில் விற்பனையானது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் வெல்லங்களின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால், நாட்டு சர்க்கரை விலை மூட்டைக்கு ரூ.30ம், உருண்டை வெல்லம் மூட்டைக்கு ரூ.100ம் குறைந்தும் விற்பனையானதாக மார்க்கெட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.