மக்கள் சேவை புரிந்த பாதிரியார் ஜேம்ஸ்கிம்டன் 100 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா
வத்தலக்குண்டு அருகே ஜி கல்லுப்பட்டி கிராமத்தில் இங்கிலாந்து நாட்டிலிருந்து இந்தியா வந்து மக்கள் சேவை புரிந்த பாதிரியார் ஜேம்ஸ்கிம்டன் 100 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கிராம பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்;
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ளது ஜி.கல்லுப்பட்டி கிராமம் இந்த கிராமத்திற்கு 1974 ம் ஆண்டு வந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் கிம்டன் என்ற கிறிஸ்தவ பாதிரியார் கிராம மக்கள் மேம்பாட்டுக்கு பல்வேறு வகையான உதவி திட்டங்களை மேற்கொண்டார் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக நிலக்கோட்டை, பெரியகுளம், போடி உள்ளிட்ட தாலுகாக்களில் ஏழை எளிய மக்களுக்கு சுமார் 8 ஆயிரம் வீடுகள் மற்றும் 4 ஆயிரம் இடங்களில் குடிநீர் ஆழ்குழாய் கிணறுகளை ஜேம்ஸ் கிம்டன் அமைத்துக் கொடுத்துள்ளார் ஜி.கல்லுப்பட்டி கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆர்.டி.யூ என்ற நிறுவனம் மூலம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகங்கள், மருத்துவமனைகள் மற்றும் மழலையர் பள்ளி தொடங்கி மேல்நிலைப்பள்ளி வரை இந்தப் பகுதியில் இவர் நிறுவி செயல்படுத்தி னார் கிராம பொதுமக்களால் தாத்தா என்று அன்போடு அழைக்கப்பட்ட ஜேம்ஸ்கிம்டன் கடந்த 2017 ஆண்டு தனது வயதில் முதுமையின் காரணமாக மரணம் அடைந்தார் ஆயிரக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகளின் மறுவாழ்வுக்கு வழிவகை செய்து கொடுத்த ஜேம்ஸ் கிம்டனை இந்த கிராம மக்கள் மாமனிதனாக போற்றி வருகின்றனர் இந்நிலையில் மறைந்த ஜேம்ஸ்கிம்டனின் 100 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை இந்த கிராம மக்கள் சிறப்பாக கொண்டாடினர் விழாவில் கிம்டனின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக நடித்துக் காட்டப்பட்டது பள்ளி மாணவர்களின் நடன நிகழ்ச்சியுடன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது இந்நிகழ்வில் ஜேம்ஸ் கிம்டன் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களான சென்னை மாநகராட்சி இணை ஆணையர் ஜெயசீலன் மற்றும் நீதிபதி நல்ல கண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று அவருக்கு புகழஞ்சலி உரை நிகழ்த்தினர் இந்நிகழ்வில் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்து ஜேம்ஸ்கிம்டன் உறவினர்கள் பங்கேற்றனர் மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இங்கு படித்த முன்னாள் மாணவர்கள் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.