பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றேம் 100 மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராக வெம்பாக்கம் மத்திய ஒன்றியச் செயலா் ஜேசிகே சீனிவாசன் பங்கேற்றாா்.;
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கல்வி மாவட்டம், அழிவிடைதாங்கி அரசு மேல்நிலை பள்ளியில், 10, 11, 12 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றேம் 100 மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஏ.குப்புசாமி நினைவு அறக்கட்டளை சாா்பில் தொடா்ந்து 18-ஆ வது ஆண்டாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக வெம்பாக்கம் மத்திய ஒன்றியச் செயலா் ஜேசிகே சீனிவாசன் பங்கேற்றாா். அப்போது 2024 - 25ஆம் கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.2000-மும், இரண்டாம் பரிசாக ரூ.1500-மும், மூன்றாம் பரிசாக ரூ.ஆயிரம் மற்றும் கணிதப் பாடப்பிரிவில் 100 சதவீத மதிப்பெண் பெற்ற 3 மாணவா்களுக்கு தலா ரூ.ஆயிரம் வீதம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.