கோவையில் 100 அடி ஆழக் கிணற்றில் விழுந்த நாய் பத்திரமாக மீட்பு!
பேரூரில் தீயணைப்பு வீரர்களின் வீரத்தால் நாய் உயிருடன் மீட்பு.;
கோவை பேரூர் அருகே மாதம்பட்டி பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றில் சுமார் 100 அடி ஆழத்தில் தவறுதலாக நாய் ஒன்று விழுந்தது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று, கிணற்றுக்குள் கயிறு மூலம் இறங்கி அந்த நாயை பத்திரமாக மீட்டனர். அப்பகுதியில் இதற்கு முன்பு கார் ஒன்று கிணற்றில் விழுந்து உயிரிழப்பு சம்பவம் ஏற்பட்டிருந்ததால், பராமரிப்பில்லாத கிணறுகளை மூட அதிகாரிகள் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நாய் மீட்பு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.