ராசிபுரம் அருகே 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மோசடி பணிதள பொறுப்பாளரை பணியிட நீக்கம் செய்யக்கோரி 4 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பதாகைகளுடன் உள்ளிருப்பு போராட்டம்..

ராசிபுரம் அருகே 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மோசடி பணிதள பொறுப்பாளரை பணியிட நீக்கம் செய்யக்கோரி 4 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பதாகைகளுடன் உள்ளிருப்பு போராட்டம்..

Update: 2024-10-09 13:55 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ராசிபுரம் அருகே 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மோசடி செய்ததாக பணிதள பொறுப்பாளரை பணியிட நீக்கம் செய்யக்கோரி 4 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பதாகைகளுடன் உள்ளிருப்பு போராட்டம்.. போராட்டத்தில் ஈடுபட்ட மன்ற உறுப்பினர்களிடம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தரையில் அமர்ந்து சமரசம்.. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட நாவல்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பணி தள பொறுப்பாளர் பேபி பணிபுரிந்து வருகிறார்.இவர் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மோசடி செய்ததாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஊராட்சி மன்ற கூட்டத்தில் பணிதள பொறுப்பாளர் பணியில் இருந்து பணியிடம் நீக்கம் செய்வதாக மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.இந்த நிலையில் இன்று மீண்டும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மன்ற கூட்டமானது நடைபெற இருந்த நிலையில் 4 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்து பதாகைகளுடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மன்ற உறுப்பினர்களிடம் நாமகிரிப்பேட்டை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருபாகரன் மன்ற உறுப்பினர்களிடம் தரையில் அமர்ந்து சமரசத்தில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்... இதுகுறித்து நாவல்பட்டி ஊராட்சி 5வது வார்டு உறுப்பினர் நவீன் கூறுகையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணிதள பொறுப்பாளர் பேபி மோசடி செய்ததாக ஊராட்சி மன்ற கூட்டத்தில் பணி நீக்கம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகும் தற்போது வரை அப்பெண் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் பணியில் இருந்து நீக்கம் செய்யக்கோரி பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் தற்போது உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறினார்...

Similar News