வருசநாடு அருகே மக்கள் தொடர்பு முகம் நடைபெற்றது
தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா ,ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜான் பங்கேற்பு
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் கடமலை-மயிலை ஒன்றியத்துக்கு உட்பட்ட உப்புதுறை கிராமத்தில் தமிழக அரசு சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொது மக்களுக்கு அரசு சார்ந்த திட்டங்கள் குறித்து துறை சார்ந்தவர்கள் விளக்கவுரை ஆற்றினார்கள்.பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .இந்த நிகழ்வின் போது ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜான் கடமலை மயிலை ஒன்றிய சேர்மன், உள்ளாட்சி பிரிதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்