பாமக சார்பில் மரக்கன்று வழங்கி கேக் வெட்டி கொண்டாட்டம்....

சங்ககிரி: அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் விழா பாமகவினர் கேக் வெட்டி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்...

Update: 2024-10-09 15:47 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம் சங்ககிரியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு பாமக சார்பில் பொதுமக்களுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வழங்கியும் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இணைப்புகளை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்..... பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு சேலம் மாவட்டம் சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே நகர செயலாளர் ஐயப்பன் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகளை வழங்கி சிறப்பித்தனர். அப்போது மாவட்ட விவசாய அணி செயலாளர் கணேசன், சங்ககிரி ஒன்றியச் செயலாளர் வடிவேல் உட்பட பாமக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

Similar News