கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியிலிருந்து 1000க்கும் மேற்பட்டோர் விலகி தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில்இணைந்தனர்

திருச்செங்கோட்டில் முன்னாள் அமைச்சரும் நாமக்கல் மாவட்ட கழக செயலாளருமான தங்கமணி ஏற்பாட்டில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த முன்னாள் மாவட்ட செயலாளர் நதிராஜவேல் தலைமையில் சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்;

Update: 2025-10-11 11:43 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சரும் நாமக்கல் மாவட்ட கழக செயலாளருமான தங்கமணி அவர்களது ஏற்பாட்டில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த முன்னாள் மாவட்ட செயலாளர் நதி ராஜவேல் தலைமையில் சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களது முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி அவர்கள் பேசுகையில் அண்ணன் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை மிக எளிதாக மக்கள் சந்திக்க முடியும் இன்றைக்கு கழக பொதுச்செயலாளரை போன்ற தலைவர் தான் தமிழகத்திற்கு தேவை. அண்ணன் அவர்களை நம்பாமல் கெட்டவர்கள் ஏராளம் , நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை.. இந்த இயக்கத்திற்கு எவ்வளவு சோதனை வந்தாலும் அதனை தாங்கி இயக்கத்தை கட்டி காத்து வருபவர் புரட்சி தமிழர் எடப்பாடியார் அவர்கள் அவர் முதல்வர் ஆகும் போது பல்வேறு சோதனைகளை தாண்டி மக்களுக்கு நான்கரை ஆண்டுகள் நல்லாட்சி தந்தவர் புரட்சி தமிழர் எடப்பாடியார் அவர்கள் எழுச்சி பயணத்திற்கு மக்கள் மிகுந்த ஆதரவு தருகின்றனர். மக்கள் திமுக ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என முடிவு செய்து விட்டனர். கொரோனோ காலத்திலும் பல்வேறு உதவிகளை செய்தவர் புரட்சி தமிழர் எடப்பாடியார் அவர்கள் நம்பி வந்த உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு இளைஞர்கள் அதிக அளவில் அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.என்று கூறினார் அதிமுக பொதுச்செயலாளர் அவர்களுக்கு வேல் வழங்கப்பட்டது அதிமுக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி பேசும்போது கூறியதாவது அதிமுகவை பொறுத்தவரையில் சாதாரண தொண்டன் கூட உயர்ந்த பதவிக்கு வர முடியும். தலைமைக்கு விசுவாசமாக கட்சிக்கு விசுவாசமாக மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அனைவருக்கும் உயர்ந்த பதவிகள் தேடி வரும். அதே போல உங்களுக்கும் உரிய பொறுப்புகள் தேடி வரும். தமிழகத்தில் பல கட்சிகள் உள்ளன. அதிமுகவிற்கும் மற்ற கட்சிக்கு உள்ள வித்தியாசம் அனைவரையும் மிக எளிமையாக சந்திக்க முடியும். அதிமுகவின் நிர்வாகிகளை எளிமையாக சந்திக்கலாம் அடிப்படைத் தொண்டர் கூட படிப்படியாக உயர்ந்து வரமுடியும். மாற்றுக் கட்சியில் இருந்து வருபவர்களுக்கு முழு பாதுகாப்பு தேவையான உதவிகள் அதிமுகவில் கிடைக்கும். நான் விவசாயியாக இருப்பதால் நீரின் அருமை எனக்கு தெரியும் நீ பாசன திட்டத்திற்கு முடி ஒதுக்கி பல்வேறு இடங்களில் செயல்படுத்திக் கொடுத்தோம் வருட தினங்கள் கூட செழிப்பான நிலைகளாக மாற்றியது அதிமுக 100 ஏரி திட்டம், அத்திக்கடவு அவிநாசி திட்டம் இவை எல்லாம் பல ஆண்டுகளாக விடுக்கப்பட்ட கோரிக்கை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை நான் விவசாயியாக இருப்பதால் அரசாங்கத்தில் நிதி பற்றாக்குறை இருந்த போதும் நிதி ஒதுக்கி இந்த திட்டங்களை நிறைவேற்றித் தந்தோம். குடிமராமத்து திட்டத்தின் மூலம் பொதுப்பணித்துறை ஏரிகள் திட்ட அனைத்து ஏரிகளும் தூர்வாரி அதிக தண்ணீர் சேமிக்கும் வழி செய்தோம் மற்ற படிக்கும் விவசாயத்துக்கும் வேறுபாடு உள்ளது விவசாயி இரவு பகல் பாராமல் உழைக்கிறார் விவசாயிகளுக்கு தேவையான திட்டங்களை அரசு செய்து தரும் 24 மணி நேரமும் இயங்கும் படி மும்முனை மின்சாரம் தந்தோம் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது விவசாய கடன் தள்ளுபடி செய்தார் கொரோனா காலத்திலும் மழை வெள்ளத்திலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டபோது 12,100 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது நாமக்கல், சேலம் மாவட்டங்களில் மட்டும் 560 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. விவசாயிகளின் மற்றொரு தொழிலான பால் உற்பத்தி மேம்பட நான் வெளிநாடு சென்ற போது அங்குள்ள பால் உற்பத்தி தொழில்நுட்பங்களை அறிந்து அந்த தொழிலின் பொன் தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக சேலம் மாவட்டம் தலைவாசலில் ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கால்நடை பூங்கா உருவாக்கி தந்தோம் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்தவில்லை அங்கு அதிமுக ஆட்சியிலேயே கால்நடை மருத்துவ கல்லூரி திறக்கப்பட்டது. விவசாயிகள் பொருளாதாரத்தில் மேம்பட விவசாயம் சார்ந்த கோழி வளர்ப்பு மீன் வளர்ப்புக்கும் அங்கு ஆராய்ச்சி நிலையம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம் விவசாயிகளுக்கான அற்புதமான கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு முடக்கி வைத்துள்ளது... கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி தந்தோம். அனைத்து தரப்பு சமுதாய மக்களுக்கும் தேவையான திட்டங்களை செய்து கொடுத்தது அதிமுக அரசு அதிமுக ஆட்சியில் அதிக நன்மைகள் பெற்ற தொகுதி திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி வேறு எந்த தொகுதியிலும் இல்லாத அளவுக்கு நான்குவழி சாலைகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். 400 கோடியில் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி வந்தோம் அதிகமான கல்லூரிகள் நாமக்கல் மாவட்டத்தில் திறக்கப்பட்டது அதனால் நாமக்கல் மாவட்டம் கல்வியில் சிறந்த மாவட்டமாக உள்ளது. அதிமுக ஆட்சியில் 68 கலை அறிவியல் கல்லூரி, 27 பாலிடெக்னிக் கல்லூரி, நான்கு பொறியியல் கல்லூரி, ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரி கொண்டு வந்தோம். அதிமுகவை நம்பியவர்கள் கெட்டது கிடையாது. வாழ்ந்த சரித்திரம் தான் உண்டு. என்று பேசினார் இந்த இந்த இனைப்பு விழா நிகழ்ச்சியில் முன்னால் அமைச்சர் சரோஜா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன். சரஸ்வதி, கே கே பி பாஸ்கர், அம்மா பேரவை செயலாளர் சந்திரசேகர்,திருச்செங்கோடு நகர செயலாளர் அங்கமுத்து, ஒன்றிய செயலாளர்கள் திருச்செங்கோடு வடக்கு எஸ் ஆர் எம் டி சந்திரசேகர் அணிமூர் மோகன்நகர அம்மா பேரவை செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Similar News