ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் 1000.கிலோ பூக்களால் பூச்சாட்டுதலுடன் தேர்திருவிழா தொடக்கம்: ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்..
ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் 1000.கிலோ பூக்களால் பூச்சாட்டுதலுடன் தேர்திருவிழா தொடக்கம்: ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்..;
ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதலுடன் தேர் திருவிழா தொடங்கியது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம்–நாமக்கல் சாலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் தேர்திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு விழா, ஐப்பசி 4. செவ்வாய் கிழமை இரவு 11.30.மணிக்கு அம்மனுக்கு பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. சிறப்பு பூஜைக்கு பின் நித்தியசுமங்கலி மாரியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் பூந்தட்டுடன் சேலம் ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு பூஜை செய்தபிறகு பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள பட்டத்தரிசி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு 1.டன் ஆயிரம் கிலோ பூக்கள் அம்மன் மேல் கொட்டி பக்தர்கள் அபி ேஷகம் செய்தனர். பின்னர் கோவில் பூசாரிகள் சண்முகம், கடல் கரை, மணி, கணேசன் உள்ளிட்டோர் சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மேலும் கோவிலில் 23ம் தேதி கம்பம் நடும் நிகழ்ச்சி நடக்கிறது. நவ., 4ல் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சியும் விழவுக்கான கொடியேற்றம் நிகழ்ச்சியும் நடக்கவுள்ளது. நவ., 5ல் பொங்கல் வைபவம், 6ல் தீமிதி விழா மாலை தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி, 8ல் சத்தாபரணம் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த திருவிழாவால், 15 நாட்கள் ராசிபுரம் பகுதி கோலாகலகமாக காணப்படும். மேலும் சேலம், ஈரோடு, கரூர், மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய வந்து செல்வர். மேலும் ஒவ்வொரு சமூகம் சார்பிலும் மண்கடப்படி கட்டளை நடக்கவுள்ளது. நவ., 8 ம் தேதி வரை மண்டகப்படி கட்டளையும், 10ம் தேதியில் இருந்து, 23ம் தேதி வரை வரை விடையாற்றி கட்டளையும் நடக்கவுள்ளது. இந்த கட்டளை நிகழ்ச்சிகளின் போது அம்மன் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.