லோக் அதாலத்' 1,017 வழக்குகளில் ரூ. 9.25 கோடிக்கு தீர்வு

தீர்வு

Update: 2024-09-16 03:58 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சியில் நடந்த தேசிய லோக் அதாலத்தில் 1,017 வழக்குகளில் ரூ.9.25 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.கள்ளக்குறிச்சி வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் வாகன விபத்து, சிவில், வங்கி காசோலை வழக்குகளுக்கான தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடந்தது. கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி இருசன் பூங்குழலி தலைமை தாங்கினார். கூடுதல் சார்பு நீதிபதி தனசேகரன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி முகமது அலி, முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹரிஹரசுதன், இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் ரீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் சேகர், செயலாளர் பழனிவேல் மற்றும் அரசு வழக்கறிஞர்கள், மனுதாரர்களின் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர். லோக் அதாலத்தில் 1,017 வழக்குகளுக்கு 9 கோடியே 25 லட்சத்து 85 ஆயிரத்து 320 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.

Similar News