முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி 102 வது பிறந்தநாள் விழா.

பரமத்திவேலூரில் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி 102 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2025-06-03 13:52 GMT
பரமத்தி வேலூர்,ஜூன்.3:  பரமத்தி வேலூர் திமுக சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் முன்னாள் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வேலூர் பேரூர் கழகச் செயலாளர் முருகன் தலைமை வகித்தார். நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மகிழ் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நவலடி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ்.மூர்த்தி கலந்து கொண்டு பரமத்தி வேலூர் கட்சி அலுவலகத்தின் முன்பு கழக  கொடியைை ஏற்றி வைத்து அதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பரமத்தி ஒன்றிய செயலாளர் தனராசு, கபிலர்மலை ஒன்றிய செயலாளர் கே.கே.சண்முகம், மேற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பூக்கடை சுந்தர் ஆகியோர் கலைஞர் திருவுருவப் பருவத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சி அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு நான்கு ரோடு, திருவள்ளுவர் சாலை அண்ணா சாலை வழியாக சென்று  அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாண்டமங்கலம் பேரூர் கழகச் செயலாளர் பெருமாள், திமுக பிரமுகர் கண்ணன்,வக்கீல் பாலகிருஷ்ணன,மதியழகன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜோதி, வேலூர் பேரூர் கழக மகளிர் அணி செயலாளர் ராணி மற்றும் இளைஞர் அணி பொறுப்பாளர்கள்,பேரூர்,நகரம், ஒன்றியம்,கிளை கழக பொறுப்பாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News