கோவை: கலைஞரின் 102-வது பிறந்தநாள் - திமுக மலர் அஞ்சலி !

கருணாநிதியின் 102-வது பிறந்த நாளை ஒட்டி அவர் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.;

Update: 2025-06-04 02:47 GMT
கருமத்தம்பட்டி நகர திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் 102-வது பிறந்த நாளை ஒட்டி அவர் உருவப்படத்திற்கு நேற்று மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. கருமத்தம்பட்டி நகர கழக அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, நகர கழக செயலாளர் நித்யா க. மனோகரன் தலைமை தாங்கினார். கலைஞர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி புகழஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கோவை தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சம்மங்காடு சண்முகம், கருமத்தம்பட்டி நகர இளைஞரணி அமைப்பாளர் சக்திவேல் முருகன், நகர நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள், மகளிர் அணியினர் மற்றும் கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Similar News