திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் 102 - வது பிறந்த விழா
1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பரிசு பொருட்கள்;
நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டில், திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் 102 - வது பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, பேரூர் கழக செயலாளர் எம்.முகமது சுல்தான் தலைமை வகித்தார். மாவட்ட விவசாய தொழிலாளர் அணியின் துணை அமைப்பாளர் இளஞ்செழியன், மாவட்ட பிரதிநிதி ஹமீது ஜெகபர், ஒன்றிய பிரதிநிதி முகமது ரஃபி, பேரூர் இளைஞரணி அமைப்பாளர் மகாராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பிரதிநிதி மைதிலி வரவேற்றார். நிகழ்ச்சியில். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தனது சொந்த செலவில் 1- ம் வகுப்பு முதல் 8- ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு பொருட்களை அயலக அணியின் புருணை அமைப்பாளர் மு.முகமது சாதிக் வழங்கினார். நிகழ்ச்சியில், பொறியாளர் அணியின் பேரூர் கழக அமைப்பாளர் ஜார்ஜ் பெர்னான்டஸ், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சாகுல் ஹமீது, கின்சில் ராஜா, கழக முன்னோடி ஜமீல் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.