பள்ளபட்டி- சட்ட விரோத மது விற்பனை-102 மது பாட்டில்கள் பறிமுதல்.3 பேர் கைது.

பள்ளபட்டி- சட்ட விரோத மது விற்பனை-102 மது பாட்டில்கள் பறிமுதல்.3 பேர் கைது.;

Update: 2025-09-13 13:15 GMT
பள்ளபட்டி- சட்ட விரோத மது விற்பனை-102 மது பாட்டில்கள் பறிமுதல்.3 பேர் கைது. கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அருகே சட்டவிரோத மது விற்பனை நடப்பது குறித்து மதுவிலக்கு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் பாலகிருத்திகா வெள்ளிக்கிழமை அன்று மதியம் 12 மணியளவில் பள்ளப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது தனியார் ஜவுளிக்கடை அருகே சட்டவிரோத மது விற்பனை நடப்பது அறிந்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார் காவல் ஆய்வாளர் பாலகிருத்திகா. அப்போது திண்டுக்கல்லைச் சேர்ந்த ரவிச்சந்திரன் ரமேஷ் வடிவேல் ஆகிய மூன்று பேரும் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டது கண்டறியப்பட்டு அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த கொரியர் நெப்போலியன் 89 பாட்டில்களும் பட்வைசர் பீர் 500 எம்எல் கொண்ட 10 பாட்டில்களும் கிங்பிஷர் 500 எம்எல் கொண்ட மூன்று பாட்டில்கள் என மொத்தம் 102 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட இந்த மதுவின் மதிப்பு ரூபாய் 8600 என மதிப்பீடு செய்த காவல்துறையினர் மூவரையும் கைது செய்து பின்னர் அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்தனர் மதுவிலக்கு காவல் துறையினர்.

Similar News