வன்னியர்களுக்கு 10.5% தனி இட ஒதுக்கீடு கோரி பாமக, வன்னியர் சங்கத்தினர்ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் தமிழக அரசை கண்டித்து பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்;;
:- வன்னியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தனி இட ஒதுக்கீடு 10.5% வழங்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் வழிகாட்டுதல் வழங்கி ஆயிரம் நாட்கள் ஆன நிலையில் உரிய புள்ளி விவரங்களை தராமல் தமிழக அரசு வன்னிய மக்களை வஞ்சித்து வருவதை கைவிட்டு உடனடியாக உரிய புள்ளி விவரங்களை தந்து வன்னியர்களின் உரிமையான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை உடனே வழங்க தமிழக அரசு வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாமக மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வன்னியர் சங்க மாவட்ட தலைவர் வாக்கா சக்திவேல், மாவட்ட செயலாளர் முத்து, பாமக மாவட்ட தலைவர் கோ.க.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கண்டன உரையாற்றினர். இதில் 1000 த்திற்கும் மேற்பட்ட அக்கட்சியினர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். அதனை தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ஆர்ப்பாட்டத்தை ஒட்டி நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.