ஏரிக்கரை அருகே ரூ 1,05,000 மதிப்பீட்டில் தண்ணீர் தொட்டி
ஏரிக்கரையில் தண்ணீர் தொட்டி அமைத்ததற்கு மிகவும் நன்றி தெரிவித்த கிராம மக்கள்;
பெரம்பலூர் ஒன்றியம் செங்குணம் ஊராட்சியின் 2023-2024 ஆண்டின் பொது நிதியில் இருந்து செங்குணம் இந்திரா நகரில் ஏரிக்கரை அருகே ரூ 1,05,000 மதிப்பீட்டில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு கடந்த சில மாதங்களாவே பயன்பாட்டில் இல்லை இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி கால்நடைகள் வளர்ப்போர் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று வரும் போது ஆடு, மாடுகளுக்கும் குடிக்க தண்ணீர் கிடைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது தொட்டியில் தண்ணீர் தேங்கி நிற்கும்படி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.