கோவையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் !

ஊதிய உயர்வில் மோசடி – கோரிக்கைகள் நிறைவேற்றப் படாவிட்டால் வேலைநிறுத்தம் அறிவிப்பு.;

Update: 2025-09-16 09:19 GMT
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள், 16% ஊதிய உயர்வில் 10% மட்டுமே வழங்கிய EMRI-GHS நிறுவனம் மற்றும் கடந்த 4 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்காத தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 30% ஊதிய உயர்வு, நீக்கப்பட்டோருக்கு மீண்டும் வேலை, 12 மணி வேலையை ரத்து செய்து 8 மணி நேர மூன்று ஷிப்ட் நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திய அவர்கள், அக்டோபர் 18-ம் தேதி வேலைநிறுத்தம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.

Similar News