ஆறு வயது மாணவர் சரண் இளம் சாதனையாளர்களை உருவாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 1,098 ஆணிகள் மீது பச்சிமோத்தாசனத்தில் அமர்ந்தவாறு 11.51 நிமிடங்களில் 6 ருப்பிக

ஆறு வயது மாணவர் சரண் இளம் சாதனையாளர்களை உருவாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 1,098 ஆணிகள் மீது பச்சிமோத்தாசனத்தில் அமர்ந்தவாறு 11.51 நிமிடங்களில் 6 ருப்பிக்ஸ் கியூபை தீர்த்து நோபில் உலக சாதனை மேற்கொண்டார்.*;

Update: 2025-06-29 11:53 GMT
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த ஆறு வயது மாணவர் சரண் இளம் சாதனையாளர்களை உருவாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 1,098 ஆணிகள் மீது பச்சிமோத்தாசனத்தில் அமர்ந்தவாறு 11.51 நிமிடங்களில் 6 ருப்பிக்ஸ் கியூபை தீர்த்து நோபில் உலக சாதனை மேற்கொண்டார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் காளைப் பாண்டியன் மற்றும் தெற்கு காவல் நிலைய தலைமை பெண் காவலர் ராதா ஆகியோரின் இரண்டாவது மகன் சரண். ஆறு வயதான சிறுவன் தற்போது ஒன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். தங்களது மகனை புதிய சாதனையாளராக உருவாக்க எண்ணிய பெற்றோர் பயிற்சியாளர் வடிவேலுவிடம் பயிற்சிக்கு அனுப்பினர். சிறுவனின் ஆர்வத்தை பார்த்த பயிற்சியாளர், ரூபிக் கன சதுரத்தை தீர்க்கும் பயிற்சி வழங்கியுள்ளார். ரூபிக் கன சதுரத்தை தீர்ப்பதில் தேர்ச்சி பெற்ற பின்னர் அதன் மூலம் நோபில் உலக சாதனை செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இளம் சாதனையாளர்கள் அதிகம் உருவாக வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், மாணவ, மாணவிகள் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய சாதனைகளை இனம் கண்டு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தும் விதமாகவும் நான்கு அடி உயரத்தில், 1,098 ஆணிகள் கொண்ட பலகையில் சிறுவன் சரண் அமர்ந்தவாறு,தனது வாயில் 11 கிலோ எடையை சுமந்த வண்ணம் 6 ரூபிக் கன சதுரங்களை 11.51 நிமிடங்களில் தீர்த்து முடித்தார். சிறுவனின் இந்த சாதனையை ஏற்றுக் கொண்ட சாதனை நிறுவனம் சிறுவன் செய்த சாதனைக்கான பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.

Similar News