விருதுநகர் சிவகாசியில் ராணுவ வீரரான தந்தை இறந்த நிலையிலும், துக்க முகத்தோடு- கண்ணீருடன் பொது தேர்வு எழுத சென்ற 11ம் வகுப்பு மாணவன்!

விருதுநகர் சிவகாசியில் ராணுவ வீரரான தந்தை இறந்த நிலையிலும், துக்க முகத்தோடு- கண்ணீருடன் பொது தேர்வு எழுத சென்ற 11ம் வகுப்பு மாணவன்!;

Update: 2025-03-20 15:39 GMT
விருதுநகர் சிவகாசியில் ராணுவ வீரரான தந்தை இறந்த நிலையிலும், துக்க முகத்தோடு- கண்ணீருடன் பொது தேர்வு எழுத சென்ற 11ம் வகுப்பு மாணவன்! விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்டேட் வங்கி காலனி 5-வது தெருவில் வசித்தவர் பரமசிவம்( வயது 50). இவரது மனைவி ஷீலா பிரியா. தம்பதியருக்கு தர்ஷன், யாகேஷ், ஸ்ரீ வதன் ஆகிய 3- மகன்கள் உள்ளனர். தர்ஷன் பிளஸ் டூ, யாகேஷ் 6-ம் வகுப்பு, ஸ்ரீவதன் ப்ரீ கேஜி கல்வி பயின்று வருகின்றனர். பரமசிவம் சத்தீஷ்கர் மாநிலத்தின் எல்லை பாதுகாப்பு படை ராணுவ வீரராக பணிபுரிந்து வந்த நிலையில், மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது இறப்பு குறித்து சிவகாசியிலுள்ள பரமசிவத்தின் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரியவந்த நிலையில், வீடே சோகமயமானது. ராணுவ உயர்திகாரிகள் மற்றும் வீரர்களின் இறுதி மரியாதையுடனான வீர வணக்கத்திற்கு பின்பு, பரமசிவத்தின் இறுதிச் சடங்கு நல்லடக்கத்திற்காக அவரது உடல் சிவகாசிக்கு கொண்டுவரப்படாத நிலையில் கூட, 11ம் வகுப்பு படிக்கும் அவரது மூத்த மகன் தர்ஷன் இன்று பொதுத்தேர்வு எழுத பள்ளிக்குச் செல்ல துக்கத்தை அடக்க முடியாமல் அழுத முகத்துடன் கண்ணீரோடு தயாரானார். இதனைக் கண்ட துக்க வீட்டிற்க்கு வந்திருந்த அனைவரின் முகத்திலும் சோகம் தொற்றிக் கொண்டது. தேர்வு எழுத பள்ளிக்கு செல்வதற்கு முன்பாக மாணவன் தர்ஷன் வீட்டில் கூடியிருந்த தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில், உயிரிழந்த தனது தந்தையின் உருவப்படத்திற்கு அஞ்சலியுடன்- வீரவணக்கம் செலுத்திய மாணவன் தர்ஷன் தனது தந்தையின் கனவை நிறைவேற்றி, தானும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற இன்றைய தினம் துக்க நிலையிலும் தேர்வை எழுதுவதாக தெரிவித்தார். பேட்டி:- தர்ஷன், பிளஸ் 1 மாணவன்- சிவகாசி.

Similar News