பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு: இபிஎஸ் இரங்கல்

பெங்களூருவில் கூட்டநெரிசலில் சிக்கி தமிழர்கள் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்ததற்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.;

Update: 2025-06-05 17:32 GMT
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், பெங்களூருவில் கூட்டநெரிசலில் சிக்கி தமிழர்கள் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் பூரண உடல்நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Similar News