பொள்ளாச்சி மனநல காப்பகத்தில் கொலை : 11 பேர் ஜாமீன் மனு தள்ளுபடி!
சோமனூரைச் சேர்ந்த வருண் காந்த் என்பவர், நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களால் அடித்துக் கொல்லப்பட்டு, அவரது உடல் பி.நாகூர் பகுதியில் புதைக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் 11 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி.;
கோவை, பொள்ளாச்சி முல்லை நகரில் உள்ள தனியார் மனநல காப்பகத்தில் தங்கி இருந்த சோமனூரைச் சேர்ந்த வருண் காந்த் என்பவர், நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களால் அடித்துக் கொல்லப்பட்டு, அவரது உடல் பி.நாகூர் பகுதியில் புதைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் தொடர்புடைய காப்பக நிர்வாகிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள்மீது கொலை, ஆயுதத் தாக்குதல், பிரேதம் மறைத்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களது ஜாமீன் மனுக்களை நேற்று விசாரித்த கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம், நீதிபதி விஜயா தலைமையில், 11 பேருக்கும் ஜாமீன் வழங்க மறுத்து மனுக்களை தள்ளுபடி செய்தார்.