எஸ் ஐ ஆர் நடவடிக்கையை கண்டித்து வரும் 11ஆம் தேதி திமுக சார்பில் நடக்க உள்ள கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. வரும் 11ம் தேதி நடக்க உள்ள எஸ் ஐ ஆர் என்ற சிறப்பு வாக்காளர் பட்டியல் சீராய்வை எதிர்த்து நாமக்கல்லில் நடக்க உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தைசிறப்பாக நடத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டது;

Update: 2025-11-08 13:38 GMT
வரும் 11ம் தேதி நாமக்கல்லில் தமிழ்நாட்டில் மத்திய ஆளும் பாஜக அரசால் கொண்டுவரப்பட்டுள்ள சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வை (S.I.R)கண்டித்து நடக்க உள்ள ஆர்ப்பாட்டக் குறித்து ஆலோசிக்க திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பரமத்தி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுகவை தலைவர் நடன சபாபதி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில், மறுமலர்ச்சி திமுகசார்பில் மாவட்ட செயலாளர் கே கே கணேசன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அன்புமணி, நகர செயலாளர் சுகுமார் ஆதித்தமிழர் பேரவை மாநில நிர்வாகி தமிழரசு மாவட்ட செயலாளர் சரவணகுமார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் முருகன், திருச்செங்கோடு குமாரபாளையம் பரமத்தி தொகுதி பொறுப்பாளர்கள்திருச்செங்கோடு மேற்கு நகர திமுக செயலாளர் முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன்,கிழக்கு நகர திமுக செயலாளர் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன்,வடக்குஒன்றிய திமுக செயலாளர் வட்டூர்தங்கவேல் ,தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் தாமரைச்செல்வன்எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ்,மாவட்ட ஓட்டுநர் செயலாளர் ராஜபாண்டி ராஜவேல், மல்ல சமுத்திரம் பேரூர் கழகச் செயலாளர் திருமலை, மல்லசமுத்திரம் ஒன்றிய திமுக செயலாளர் பழனிவேல்,குமாரபாளையம் தெற்கு நகரக் கழக செயலாளர் ஞானசேகரன், பள்ளிபாளையம் மத்திய ஒன்றிய செயலாளர் தளபதி செல்வம்,ஒன்றிய செயலாளர் இளங்கோ வடக்கு ஒன்றிய செயலாளர் நாச்சிமுத்து,பள்ளிபாளையம் நகரக் கழக செயலாளர் குமார்,மற்றும் பரமத்தி திமுக நிர்வாகிகள்என பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எஸ் ஐ ஆர் என்னும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராவினால் தமிழகத்தில்பீகாரில் நடந்தது போல் வாக்காளர்கள் பெரும்பான்மையான அளவில் நீக்கம் செய்து விட கூடாது,மற்ற மாநிலத்தில் இருந்து வேலை காரணமாக இங்கே வந்தவர்கள் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டு விடக்கூடாது என்பதில் எள்ளளவும் கவனக்குறைவாக இருந்து விடக்கூடாது நாம் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் கூட செய்கிற பணியில் எவ்வித தொய்வும் இருந்துவிடக் கூடாது என எடுத்துக் கூறப்பட்டது மேலும் வரும் 11ம் தேதி நடக்க இருக்கிற ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாக கலந்து கொள்ளுவதன் மூலம் மத்திய அரசிற்கும் தேர்தல் ஆணையத்திற்கும் நம்முடைய எதிர்ப்புணர்வை பதிவு செய்ய வேண்டும் என்பதால் அனைவரும் பெரும் திரளான கூட்டத்தை அழைத்து வந்து ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டது.இதனைத் தொடர்ந்து நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது மாவட்ட அவை தலைவர் நடனசபாபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி அவர்களின் மறைவிற்கும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கதிரவன் அவர்களின் தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதே போல் தமிழ்நாட்டில் மத்திய ஆளும் பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு எஸ் ஐ ஆர் ஐ எதிர்த்து வருகிற 11-ம் தேதி காலை 10 மணிக்கு நாமக்கல்லில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய நகர பேரூர் கழகங்களின் சார்பில் சிறப்பான முறையில் பெரும் திரளாக கலந்து கொள்வது என தீர்மானிக்கப்பட்டது நவம்பர் 27ஆம் தேதி தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக அன்று அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், இனிப்புவழங்குவது மற்றும் பொதுக்கூட்டங்கள்நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.

Similar News