கட்சி சார்பில் ஒன்றிய மோடி அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராக ஜூன் 11 ந்தேதி முதல் -20-ந்தேதி வரை இருசக்கர வாகன பிரச்சாரம் மற்றும் நடைபயணம்: மாவட்ட குழு முடிவு*
கட்சி சார்பில் ஒன்றிய மோடி அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராக ஜூன் 11 ந்தேதி முதல் -20-ந்தேதி வரை இருசக்கர வாகன பிரச்சாரம் மற்றும் நடைபயணம்: நடத்துவதென மாநில குழு ஆலோசனைகள் பேரில் மாவட்ட குழு கூடி முடிவு செய்யப்பட்டது.;
அரியலூர், மே.17- சிபிஎம் கட்சி சார்பில் ஒன்றிய மோடி அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராக ஜூன் 11 முதல் 20 ஆம் தேதி வரை இருசக்கர வாகன பிரச்சாரம் மற்றும் நடைபயணம் மேற்கொள்வது என மாவட்ட குழு மூலம் முடிவு செய்யப்பட்டு தீர்மானிக்கப்பட்டது. சிபிஎம் கட்சி மாவட்டக்குழு கூட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் .வி.பரமசிவம் தலைமையில் சிபிஎம் கட்சி மாவட்ட செயலாளர் இளங்கோவன் முன்னிலையில் அரியலூர் சிபிஎம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் கலந்து கொண்டு மாநிலக்குழு முடிவுகளை விளக்கி பேசினார். கூட்டத்தில் மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கைக்கு எதிராக ஜூன் 11-ந்தேதி முதல் 20-ந் தேதி வரை இருசக்கர வாகன பிரச்சாரம் மற்றும் நடைபயணம் நடத்துவது என மாநில குழு மூலம் மாவட்ட குழு முடிவு செய்யப்பட்டு அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய நகராட்சிகளில் நடைபயணத்தை துவங்கி பிரச்சாரம் செய்வது எனவும் மற்ற இடைக் குழுக்கள் சார்பில் இருசக்கர வாகனத்தின் மூலமாக கிளைகள் வாரியாக பிரச்சாரம் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டு ஜுன் 17-ந் தேதி ஜெயங்கொண்டத்தில் நடைப்பயணம் மற்றும் வாகன பிரச்சாரமும், ஜூன்.15. ந்தேதி அரியலூர் நகராட்சியில் நடை பயணம் வாகன பிரச்சாரமும், ஜூன் 17ஆம் தேதி ஆண்டிமடத்திலும், ஜூன் 20ஆம் தேதி திருமானூரிலும், ஜூன் 11ஆம் தேதி தா.பழூரிலும் நடைபயணம் மற்றும் இருசக்கர வாகன பிரச்சாரமும் நடத்துவது எனவும், தீக்கதிர் சந்தா ஜூலை 1 முதல் 10 ஆம் தேதி வரை சந்தா சேகரிப்பு இயக்கத்தை தீவிரப்படுத்துவது, ஜெயங்கொண்டத்தில் 100 ஆண்டு சந்தாவும் அரியலூரில் 100 ஆண்டு சந்தாவும் மற்ற இடைக்கமிட்டிகள் தலா 75 ஆண்டு சந்தாவும் மின்னரகம் சார்பாக 33 ஆண்டு சந்தாவும் சேர்ப்பது என முடிவு செய்து தீர்மானிக்கப்பட்டது.