காதல் தம்பதியர் மோசடி: 112 பேரிடம் ரூ.2 லட்சம் மோசடி – கோவையில் கைது

பொய்யான குறுஞ்செய்தி காட்டி, 112 பேரிடம் ரூ.2 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்த காதல் தம்பதி கைது.;

Update: 2025-06-21 00:53 GMT
GPay மூலம் பணம் அனுப்பியதாக கூறி பொய்யான குறுஞ்செய்தி காட்டி, 112 பேரிடம் ரூ.2 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்த காதல் தம்பதியை கோவை கவுண்டம்பாளையம் போலீசார் கைது செய்தனர். முகமது ரிஸ்வான் மற்றும் ஷர்மிளா பானு என்ற தம்பதியர், மருத்துவ அவசரம் என கூறி பணம் கேட்டுள்ளனர். பின்னர் GPay-யில் “Request” செயலில் குறுஞ்செய்தி மட்டும் காட்டி, பணம் வந்தது போல நாடகமாடினர். சிறிய தொகை என்பதால் பலர் புகார் செய்யாததை பயன்படுத்தி, சொகுசு வாழ்வை நடத்தினர். காவல்துறையின் விசாரணையில் உண்மை வெளிவந்தது. இருவரும் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Similar News