அமராவதி ஆற்றில்11,375- கன அடி நீர் திறப்பு. இரு கரைகளையும் தொட்டுச் செல்லும் வெள்ள நீர்.
அமராவதி ஆற்றில்11,375- கன அடி நீர் திறப்பு. இரு கரைகளையும் தொட்டுச் செல்லும் வெள்ள நீர்.
அமராவதி ஆற்றில்11,375- கன அடி நீர் திறப்பு. இரு கரைகளையும் தொட்டுச் செல்லும் வெள்ள நீர். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது அமராவதி அணை. தமிழகத்தில் தொடர்ந்து வரும் கனமழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் நிறைந்து வருகிறது. 90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதி அணையில் இன்று காலை 7 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 87.50 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து நேற்று 27,983 கன அடியாக இருந்த நிலையில் இன்று அணைக்கு நீர்வரத்து 11,522 கனஅடியாக உள்ளது. இதில் அணையில் இருந்து நேற்று 36,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று 11,375-கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அமராவதி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டு தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் அமராவதி ஆற்றின் கடைமடை பகுதியாக உள்ள கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளில் சிறுவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், உள்ளிட்ட எவரும் நீரில் இறங்கி குளிப்பதையோ, மீன்பிடிப்பதையோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ, செல்ஃபி, புகைப்படங்கள் எடுப்பதை முற்றிலும் தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ஏற்கனவே அறிவிப்பு செய்துள்ளார் .