திண்டுக்கல்லில் வியாபாரியிடம் நூதன முறையில் ரூ.11,99,325 மோசடி

திண்டுக்கல்லில் வியாபாரியிடம் ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி நூதன முறையில் ரூ.11,99,325 மோசடி;

Update: 2025-09-06 05:11 GMT
திண்டுக்கல்லை சேர்ந்த வியாபாரி மாரிமுத்து இவரின் வாட்ஸ்-அப் க்கு வந்த குறுந்தகவலை பார்த்தவுடன் மர்மநபர் அவரை தொடர்பு கொண்டு ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்றும் நாங்கள் கூறும் வர்த்தகத்தில் ஈடுபட ஆசை வார்த்தை கூறியதை தொடர்ந்து மாரிமுத்து பல்வேறு தவணையாக வங்கி கணக்கு மூலம் ரூ.11,99,325 செலுத்தினார் அதன்பிறகு அந்த இணையதளம் முடங்கியது வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டவர்களிடமும் பேச முடியவில்லை தான் ஏமாற்றப்பட்டது உணர்ந்த மாரிமுத்து திண்டுக்கல் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் விக்டோரியா லூர்து மேரி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News