பெண்ணிடம் 12 பவுன் நகை பறிப்பு

மதுரை உசிலம்பட்டி அருகே பெண்ணிடம் நகை பறித்து சென்ற சம்பவம் நடந்துள்ளது;

Update: 2025-03-13 01:42 GMT
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே மலையூரை சேர்ந்த கணேசனின் மனைவி மலர்கொடி (36) என்பவர் நேற்று (மார்ச் .12) மாலை மகளுடன் ரெட்டியபட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற போது நரியம்பட்டி பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர் இருவரையும் கீழே தள்ளிவிட்டு மலர்கொடி கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் தாலி செயினை பறித்து தப்பினார். கீழே விழுந்ததில் தாய், மகள் காயமடைந்தனர். இது தொடர்பாக விக்கிரமங்கலம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Similar News