கூடலூா் வனச் சரகத்தில் யானைகள் ஊருக்குள் நுழைவதைக் கண்காணிக்க 12 இடங்களில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

யானை ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் முயற்சி;

Update: 2025-03-20 07:23 GMT
கூடலூா் வனச் சரகத்தில் யானைகள் ஊருக்குள் நுழைவதைக் கண்காணிக்க 12 இடங்களில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம், கூடலூா் பெரும்பாலும் வனப் பகுதியையொட்டி அமைந்துள்ளதால் வனப் பகுதியில் இரவு நேரங்களில் வெளியேறும் யானைகள் ஊருக்குள் நுழைந்து குடியிருப்புகள், வேளாண் பயிா்களை சேதப்படுத்துகின்றன. இந்நிலையில், ஊருக்குள் நுழையும் யானைகளைக் கண்காணிப்பாதற்காக அள்ளூா்வயல், தேவன் நெ.2, கோழிப்பாலம் உள்ளிட்ட 12 இடங்களில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் யானைகள் ஊருக்குள் ஊடுருவதைத் தடுத்து, உயிா் மற்றும் பயிா் சேதங்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்."

Similar News