ரூ 12 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள்

ரூ 12 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் ஆய்வு;

Update: 2025-04-04 15:16 GMT
தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட 25 மற்றும் 28-வது வார்டு பகுதிகளில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை ஏற்று அதனை உடனடியாக சரி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. உடுமலை சாலையில் நகராட்சி பொது நிதியிலிருந்து 25-வது வார்டு பகுதியில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய மழை நீர் வடிகால் அமைக்கும் பணி மற்றும் பீமராயர் வீதி 28-வது வார்டு பகுதியில் பொது நகராட்சி நிதியிலிருந்து சுமார் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிய மழை நீர் வடிகால் சிறு பாலம் அமைக்கும் பணி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதை நகர்மன்ற தலைவர் பாப்புகண்ணன் ஆய்வு மேற்கொண்டார். நடை பெற்று வரும் இந்த பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடுவதற்கு ஒப்பந்ததாரர்களிடம் அறிவுறுத்தப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் நகராட்சி குடிநீர் மேற்பார்வையாளர்கள் பிரபாகரன், ஆல்துறை நகர்மன்ற உறுப்பினர்கள் மலர்வழி கணேசன், மீனாட்சி கோவிந்தராஜ், நகராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Similar News