தஞ்சாவூரில் ஒரே நாளில் 12 காவல்துறை உதவி ஆய்வாளர்கள் பணி ஓய்வு

நூல் வெளியீடு;

Update: 2025-06-01 17:45 GMT
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரே நாளில் காவல்துறையைச் சேர்ந்த 12  உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சனிக்கிழமை பணி ஓய்வு பெற்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 12 பேர் வயது முதிர்வு காரணமாக சனிக்கிழமை ஒரே நோளில் பணி ஓய்வு பெற்றனர். உதவி ஆய்வாளர்களின் பெயர் மற்றும் அடைப்புக்குறிக்குள் பணியாற்றிய இடம் பற்றிய விவரங்கள்: ஆர். உதயசூரியன் (பாப்பாநாடு), எஸ். ஞானமுருகன் (பந்தநல்லூர்), எஸ். சந்திரசேகரன் (பட்டீஸ்வரம்), எம். சத்தியநாதன் (தஞ்சாவூர் தெற்கு), எம். சுப்பிரமணியன் (சுவாமிமலை), ஏ. வெற்றிவேல் (அய்யம்பேட்டை). சிறப்பு உதவி ஆய்வாளர்களின் பெயர் மற்றும் அடைப்புக்குறிக்குள் பணியாற்றிய இடம் பற்றிய விவரங்கள்: ஜி. நெடுமாறன் (மாவட்டக் குற்றப் பிரிவு), ஆர். நந்தகுமார் (பந்தநல்லூர்), ஆர். காளிமுத்து (தஞ்சாவூர் கிழக்கு), பி. ராமலிங்கம் (நெடுஞ்சாலை ரோந்து 3), பி. ஆதிகேசவன் (திருவிடைமருதூர்), ஏ. ரான்சன் (தஞ்சாவூர் தெற்கு). இவர்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் கௌரவித்து வாழ்த்து தெரிவித்தார்.

Similar News