அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூலகத்திற்கு புத்தகங்கள் மற்றும் 12 மின்விசிறிகளை வழங்கிய முன்னாள் மாணவர்கள்

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூலகத்திற்கு புத்தகங்கள் மற்றும் 12 மின்விசிறிகளை முன்னாள் மாணவர்கள் வழங்கினார்கள்.;

Update: 2025-06-18 11:26 GMT
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூலகத்திற்கு ஆறாயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் மற்றும் 12 மின்விசிறிகளை பள்ளியின் முன்னாள் மாணவர்களான ஜீவானந்தம், தனபால் ஆகியோர் வழங்கினார்கள்.. இப்பள்ளியில் ஆயிரத்து 250 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இம்மாணவர்கள் செல்போன் மற்றும் சமூக வலைதளங்களில் இருந்து விடுபட்டு அறிவுத்திறனை வளர்ப்பதற்காகவும், NEET. உள்ளிட்ட பிற நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெறவும் புத்தகங்களை வழங்குவதாகவும், தாங்கள் பயின்ற இந்த பள்ளிக்கு இனி வரும் காலங்களிலும் தொடர்ந்து பல நன்கொடைகள் வழங்க இருப்பதாகவும் கூறினார்கள்.. இவற்றை ஆசிரியர்கள் சிவகுமார், கவிராஜ், என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இவர்களுடன் முன்னாள் மாணவர்கள் செந்தில்குமார், பள்ளி மேலாண்மை குழு ராஜேந்திரன் மற்றும் அழகேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News