மஞ்சாநயக்கன்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் 125 பயனாளிகளுக்கு ரூ.1.35 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.*
மஞ்சாநயக்கன்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் 125 பயனாளிகளுக்கு ரூ.1.35 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.*;
மஞ்சாநயக்கன்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் 125 பயனாளிகளுக்கு ரூ.1.35 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.* நிகழ்ச்சியே தமிழ் தாய் வாழ்த்துடன் துவங்கினர் உதவிகளை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் வழங்கினார். வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் 48,242 விவசாயிகளுக்கு தனி குறியீடு எண் வழங்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம். கடவூர் வட்டம், மஞ்சாநயக்கன்பட்டி ஊராட்சியில் மக்கள் சந்திப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில், மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு அரசு ஊழியர்கம் கலந்து கொண்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களும் கடைக்கோடி கிராமங்களில் பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற வகையில் மாதந்தோறும் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நடத்தப்பட்டது இதனை தொடர்ந்து மஞ்சாநயக்கன்பட்டி ஊராட்சியில் காணிகளத்தூர். காணியாளம்பட்டி, கள்ளபொம்மன்பட்டி, குறளப்பன்பட்டி, மாணிக்கபுரம், மஞ்சாநாயக்கன்பட்டி, நத்தப்பட்டி, பிச்சம்பட்டி, ராசாங்கோவிலூர், செல்லாண்டிபுரம், வீரியபட்டி மற்றும் வில்வமரத்துபட்டி உள்ளிட்ட 13 குக்கிராமங்களை உள்ளடக்கிய 4,637 மக்கள் தொகை கொண்டதாகும். இக்குக்கிராமங்களில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் தனித்தனியாக மக்களின் இருப்பிடங்களுக்கே சென்று அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவுகள் சேகரிக்கும் பணி வேளாண்மைதுறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் முதல் கட்டமாக விவசாயிகளின் தரவுகளை சேகரிக்கும் பணியினை மேற்கொள்ள பணியாளர்களை ஒருங்கிணைத்து தரவுகள் சேகரிக்கும் பணிகள் கிராம அளவில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மருத்துவ துறை , வேளாண்மை துறை மற்றும் பல்வேறு துறைகள் கலந்து கொண்டனர்.ஒவ்வொறு துறை பற்றிய பயிற்சிகள் மக்களுக்கு எடுத்துறைதானர்.இறை வாழ்த்துக்களுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.